தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு தொகுதியாக என்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தினங்களான ஏப்ரல் 6 மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் 4 மற்றும் 5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.