கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரொட்டிக்கடை லோயர் பாரளை எஸ்டேட் பாறைமேடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நேற்று நின்று கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு கடை திறந்தவுடன் மது பிரியர்கள் மதுபாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது யானைகள் சோலைக்குள் நின்று கொண்டிருந்தது.
மதியம் 2 மணி அளவில் இரண்டு காட்டு யானைகளும் மதுபான கடைக்கு வந்தவர்களை விரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டி அடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.