மது பாட்டிலில் பூச்சி மிதந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு இருப்பு பகுதியில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் மாலை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்த மதுப்பிரியர் ஒருவர் அங்கு இருக்கின்ற ஒரு கடையில் ரூ 160 கொடுத்து குவாட்டர் அளவிலான மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த மது பாட்டிலில் பூச்சி ஒன்று செத்து மிதந்து உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுபிரியர் மதுபான கடை விற்பனையாளரிடம் சென்று மதுபாட்டிலில் பூச்சி கிடைப்பதை தெரிவித்து அதனை மாற்றி தர வேண்டும் என்று கூறினார்.
அதற்கு விற்பனையாளர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த மது பிரியர்கள் விற்பனையாளரிடம் பூச்சி இருந்த பாட்டிலை மாற்றி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விற்பனையாளர் பூச்சி கிடந்த மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வேறு மது பாட்டிலை கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.