Categories
அரசியல்

டாஸ்மாக் டெண்டர்…. இது தா நடந்துச்சு….. விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டெண்டரில் கலந்து கொள்ளலாம் எனக் கூறினார்.

மேலும் டெண்டர் கோரிய எல்லோர் முன்னிலையிலும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது எனவும் இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை எனவும் அவர் கூறினார். மேலும் விதிமுறைகளை பொருத்தவரை 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த விதிமுறையில் எந்த மாற்றமுமின்றி அதே விதிமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் அதிக விலைக்கு மதுபானம் விற்ற 124 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினார் .தொடர்ந்து பேசிய அவர் தற்போது 66 விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லை மேலும் ஏதேனும் விதிமீறல்கள் இதுவரை நடக்கவில்லை எனவும் இனி நடக்கவே நடக்காது எனவும் அவர் கூறினார்.

Categories

Tech |