தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகவும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் திரும்பப் பெறப்படும் என எச்சரித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்குத் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.