Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர் வழங்கக் கூடாது…. சென்னை உயர்நீதிமன்றம்..!!

டாஸ்மாக் மதுபான பார் உரிமத்திற்கான டெண்டர் வழங்கக் கூடாது என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உரிமம் பெற்று பார் நடத்துவோரின் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் மதுபான பார் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம்,  ஆனால் உரிமம் வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Categories

Tech |