Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக்” மக்களே தடுக்கலாம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று மக்கள் பல நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக கல்வி நிறுவனங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவது கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன்பின்பு அதை கடைபிடிப்பது இல்லை என்றும் மது விற்பனையை தடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வைத்து தமிழக அரசானது மது விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து இந்த மதுவிலக்கு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது நல்ல ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில், தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்க மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால், அதை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் அனுமதிக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து 30 நாளில் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யும் வகையிலும் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

Categories

Tech |