Categories
விளையாட்டு

டிஎன்பிஎல்-லில் 225 கோடி சூதாட்டம்….!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது தமிழ்நாட்டில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவில் சூதாட்டம் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Image result for கிரிக்கெட் சூதாட்டத்தில்

இந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எல் தொடரில் மதுரை பேந்தர்ஸ்  மற்றும் தூத்துக்குடி  அணிகளுக்கு இடையேயான ஒரு ஆட்டத்தில் மட்டும் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்ததாக பிபிசியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அணி பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களிலும் அதிகளவில் சூதாட்டம் நடைபெற்றதாக ஊழல் தடுப்பு பிரிவு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அணியின் உரிமையாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தரகர்கள்  சூதாட்டத்தை   நடத்துவதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி அணியில்   இரண்டு இணை உரிமையாளர்கள் சமீபத்தில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |