தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2 & 2A தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் குரூப் 2 & 2A தேர்விற்கான பதவி மற்றும் கல்வித்தகுதி போன்றவற்றின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
இந்த குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் பணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர், அலுவலர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும் தலைமைச்செயலக உதவிப் பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை, உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளும் நேர்முகத் தேர்வின் கீழ் தெரிவு செய்யப்படுகிறது. அதேபோன்று குரூப்-2ஏ தேர்வு மூலம் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படும். குரூப் 2 & 2A தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானவை. தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க மட்டும் பட்டப்படிப்புடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.