Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்….. நாளை போட்டி தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021 டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் புள்ளியில் சார்நிலைப் பணிக்கான தேர்வு மற்றும் கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுகள் நேற்று நடக்கவிருந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.

அப்போது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் அரசு டிஎன்பிசி தேர்வு எழுத செல்பவர்கள் தேர்வு அனுமதி சீட்டை காண்பித்து பயணம் செய்யலாம் என்று அறிவித்தது. எனவே தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளயில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு ஜனவரி 14-ஆம் தேதி அதாவது நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி தேர்வு நாளை நடைபெற உள்ளது. மேலும் தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |