Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் பணியாளர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 போன்ற தேர்வுகள் மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்கிறது. இதன் மூலமாக பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் அரசு பணிக்கு தயாராகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி வருகின்றனர். 2020ஆம் வருடம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த 3 அரசுத்தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட இருக்கிறது. சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தற்போது SSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இணையவழியாக நடைபெற்று வருகின்றது.

இதேபோன்று குரூப்-1 & குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளானது ஜன- 10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.கே.வீரராகவ ராவ் அரசு தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் அதிகாரபூர்வ இணையபக்கத்தில் அனைவரும் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |