Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

குருப் 1 தேர்வில் சான்றிதல் சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை எழுத்துத் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.200ஐ மார்ச் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தவறும் பட்சத்தில் இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |