கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற குரூப், 1 தேர்வு முடிவுகள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா குறைய தொடங்கிய காலகட்டத்தில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மே மாதம் 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் நம்பகத் தன்மையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது அனைத்து போட்டித் தேர்வுக்கும் தமிழ்மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிந்தவுடன் தேர்வு விவரங்கள் உடனடியாக பிரித்து எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப்-1 மெயின் தேர்வு கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்தல் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவுத் துறை, துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை, உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட 66 மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. தமிழகத்தில்37 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான முடிவுகள் வரும் மே மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.