தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலம் 92 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பட உள்ளது. அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு குறித்த மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிறும் வட்டத்தின் மூலம் இன்று தொடங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நகலுடன் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை 0461-2340159என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.