Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Answer Key பதிவிறக்கம் செய்ய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதன் முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. 300 மதிப்பெண்களைக் கொண்ட இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தேர்விற்கான விடைக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிட உள்ளது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 விடை குறிப்பை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து எதிர்பார்க்கலாம்.

அதற்கு முதலில் டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் whats new என்பதில் டி என் பி எஸ் சி குரூப் ஒன் ஆன்சர் கீ என்பதை கிளிக் செய்தால் ஆன்சர் கீ பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும். அதில் நீங்கள் தேர்வில் அளித்த விடைகள் சரியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் விடைக்குறிப்பில் ஏதாவது உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதனை‘CLICK HERE TO CHALLENGE THE ABOVE TENTATIVE KEYS’ என்ற லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |