தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய போட்டி தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் அரசு பணிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைவான அளவில் பணியிடங்களில் வாய்ப்பு கிடைப்பதால் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வர்களுக்கு உதவும் அடிப்படையில் முதன்மை தேர்வுக்குரிய பாடத் திட்டம் மற்றும் வினாத்தாளினை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது வெளியிட்டு உள்ளது. இதை https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி -யின் புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட திட்டம் மற்றும் பாடத்திட்டம்
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/5_G2_New_Scheme_Syllabus.pdf
மாதிரி வினாத்தாள் (Preliminary Examination)
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/6_G2_Prelim_Model%20QP_23122021.pdf
மாதிரி வினாத்தாள் (Preliminary Examination)
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/7_G2_Main_Model%20QP_23122021.pdf