Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்த இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதமும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதமும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் குரூப் 2 தேர்வுக்கான பணியிடத்தில் 5,831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 தேர்வுக்கான பணியிடத்தில் 5,255 காலிப்பணியிடங்களும் இருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, டிஎன்பிஎஸ்சி அறிவித்தபடி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தாள் கட்டாயம் என்றும் குரூப் 1 மெயின் தேர்வு திட்டமிட்டபடி மே மாதம் 4,5 6 போன்ற தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட்டு, அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன்பின் இதுவரையிலும் போட்டி தேர்வுகள் காலையில் 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது. ஆனால் இனிமேல் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் மாலையில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |