தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி காலை மற்றும் மதியம் என நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் டிசம்பர் 16ஆம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களை இ சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.