தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாக குரூப்-1 குரூப்-2, 2ஏ, குரூப் 3, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு கிடையாது. மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்திற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வருகின்ற பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதேபோல் இந்த தேர்வுகள் மூலம் கிட்டத்தட்ட 5,831 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த குரூப் 4 தேர்வுக்கு 5,255 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் இந்த தேர்வுகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வசதி வாரியம், மாநகர போக்குவரத்து கழகம், மின்சார வாரியம் உள்ளிட்ட பணிகளில் காலி பணி இடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இதில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் அரசு இருப்பதால் குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுடன் இந்த காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட உள்ளது. எனவே அதிகாரிகள் குரூப்-2, 2ஏ, குரூப்-4 பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.