Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே….. இன்று(ஜூலை 17) ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு இன்று(ஜூலை 17ஆம் தேதி) அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://surl.li/cjiqr என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |