Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022…. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர்,போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் இந்த பணியிடங்களுக்கு இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு பணியிடத்திற்கு போட்டியிடும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்களுக்கு உதவ கூடிய வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வர்களுக்கு அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் அறிவிப்பில்,சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் வழி பயிற்சி வகுப்புகளை மே 20ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. அரசு சார்பாக நடத்தப்படும் உள்ள இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் http://t.me/+huD-ieZ540EzOc9 என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |