தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் பெருபாலானோர் எழுதகூடிய குரூப் 4 & VAO தேர்வு தொடர்பாக அறிவிப்பு 2022 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு ஜூன் (அ) ஜூலை மாதத்தில் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணி இடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர்.
அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணி இடங்களை இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுவதால் இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வை எழுதலாம். குரூப்-4 தேர்வு ஒரேயொரு எழுத்துத் தேர்வை அடிப்படையாக கொண்டது ஆகும். மொத்தமாக 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வானது நடைபெறும். வினாத்தாளில் 2 பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். முதலாவது பகுதியில் தமிழ்மொழி பாடப்பிரிவிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இவற்றில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
# பொது அறிவு பிரிவில் 100 வினாக்களில் 75 பொதுஅறிவு வினாக்களும் , 25 திறனறி தேர்வு வினாக்கள் இடம்பெறும்.
# அறிவியல் பாடத்திலிருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பிரிவுகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
# சமூக அறிவியலை பொறுத்தவரையிலும் இந்திய அரசியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் போன்ற பிரிவுகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
# திறனறித்தேர்வானது கணிதத்தை அடிப்படையாக கொண்டது. கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சதவிகிதம், விகிதம், அளவியல், லாபம், நட்டம், தனிவட்டி , கூட்டுவட்டி, கன அளவு போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.