Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்…!! மிக மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2ஏ பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை ஆனால் தற்போது நிலைமை சீராகி உள்ளதை தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன அதன்படி குரூப் 2 குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரியவந்துள்ளது அதோடு இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்களில் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்துள்ளது அது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்

20 வகையான இலக்கண தலைப்புகளை கொண்ட பகுதி தற்போது புதிதாக பழமொழிகள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இலக்கியத்தில் உள்ள திருக்குறள் அதிகாரத்தில் ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னொ செய்யொமை, கூடொ நட்பு, உழவு உள்ளிட்ட அதிகாரத்தை புதிதாக இணைத்து மொத்தமாக தற்போது 25 அதிகாரத்தை கொண்டுள்ளது.இதையடுத்து இராவண காவியம் தொடர்பான செய்திகள் என்ற தலைப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சிற்றிலக்கியங்களில் அழகர் கிள்ளை விடு தூது, திருவேங்கடத்து அந்தாதி, பெத்தலகேம் குறவஞ்சி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பகுதி ‘இ’யில் தமிழ் அறிஞர்கள் என்பதன் கீழ் உள்ள சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், மோகன ரங்கன் உள்ளிட்ட புதுக்கவிதை எழுத்தாளர்கள் நீக்கப்பட்டுள்ளது.தமிழ் கடித இலக்கியம் என்பதன் கீழ் உள்ள ஆனந்தரங்கம் பிள்ளை நாள் குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. அதோடு நாட்டுப்புற கலை இசைக்கலை என்பதற்கு பதிலாக நிகழ்கலை சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ் அறிஞர்களில் உரைநடையின் கீழ் உள்ள தலைப்புகளில் பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சமுதாய தொண்டு என்பதன் கீழ் புதிதாக ம.பொ. சிவஞானம் ,காயிதேமில்லத் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ் மகளிரின் சிறப்பு – வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் என்ற தலைப்பை புதிதாக சேர்த்துள்ளது. பகுதி ‘இ’ யில் நூலகம் பற்றிய செய்திகள் என்ற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |