Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு…!! வெளியான மிக முக்கிய தகவல்…!!

தீவிர கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளை பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 32 போட்டித் தேர்வுகள் நடைபெறும் எனவும் தமிழ் பாட தாள் கட்டாயமாக்க பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பும் இந்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியதாவது,
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் எனவும் இந்த அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் எனவும் இந்த தேர்வுகள் அனைத்தும் இனி காலை 9.30 மணி முதல் 12.20 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |