டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி போன்ற அரசு தேர்வுகளுக்கான 10 நாள் இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கு இன்று ஆரம்பமாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 மற்றும் யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கம் (இன்று) சனிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் வரை நடத்த உள்ளதாக கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் 10 நாட்கள் மட்டும் இலவச பயிற்சி வகுப்புகளும், அதன் பின்னர் குறைவான கட்டணத்தில் 500 மணி நேர பயிற்சி வகுப்புகளும் மேலும் 70 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். இப்பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவுக்கு இணைய முகவரியும் மேலும் விவரங்களுக்கு 9444227273 என்ற நம்பரை அணுகலாம். இதனை அடுத்து இந்த கருத்தரங்கின் போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரிநாராயணன் மற்றும் ஜவகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றியுள்ளனர்.