Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு புதிய அறிவிப்பு…. இதை யாரும் செய்யாதீர்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப் படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் போதுமானது. தற்போது வழங்கப்படும் ஆன்-லைன் வழி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். பெற்றோர் கலப்பு திருமணம் செய்திருந்தால் தந்தை அல்லது தாய் சார்ந்த ஜாதி பெயரில் சான்றிதழ் பெறலாம் என தெரிவித்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அனைவரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

Categories

Tech |