Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள்… கண்டிப்பா இதை செய்யணும், மறந்துடாதீங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண் வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்திக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வுகளில் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விண்ணப்பதாரர்கள் தனது நிரந்தர பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. மேலும் ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவிற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதுமட்டுமன்றி ஆதார் சட்டம் 2016 இன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் பற்றிய விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்க படாது.

ஆதார் எண்ணை விண்ணப்ப தாரர்களின் நிரந்தரப் பதிவில் இணைப்பதற்கு வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணைய தள முகவரி www.tnpscexam.in என்பதில் வெளியிடப்பட்டது. இதுபற்றி பீட் பேக் அளிப்பதற்கும் அந்த இணையத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வாணையத்தின் நிரந்தரப் பதிவு எண் வைத்திருக்கும் தேர்வாளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |