Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இப்படித்தான்…. புதிய திட்டம் அறிமுகம்….!!!!

டி என் பி எஸ் சி தேர்வுகள் இணையத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதாவது தவறான விவரங்களை பதிவு செய்தால் அவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாக பதிவு செய்து விடுவதால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.

இதனைத் தவிர்ப்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரை மாற்றிக் கொள்ள புதிய வழிவகை செய்துள்ளது. எனவே தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி முடிந்த பின்னர் 4 நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரி பார்த்து மாற்றிக்கொள்ள மூன்று நாட்கள் விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக பதிவு செய்திருந்தால் அதனை மாற்றி சரியான மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்கள் அனைத்தையும் விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும்போது அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு விண்ணப்பதாரர் தான் பொறுப்பு. விண்ணப்பம் நேர் செய்யும் காலத்திற்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே விண்ணப்பத்தாளர்கள் விண்ணப்பத்தை திருத்துவதற்கான கால அவகாசத்தை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |