Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நவம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி துறைத் தேர்வுகளுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான வாய்மொழித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேலூர் இந்த நான்கு நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |