தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வருகின்ற 8,9 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எழுத்துத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.