தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி பொருளாதாரம்,கணிதம், மற்றும் பொது படிப்பு உள்ளிட்ட பாடங்களுக்கான ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைக்கான 193 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை சேவை பதவிகளுக்கான எழுத்துத்தேர்வில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பங்களும் அவற்றிற்கான விடை குறிப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் CCSE காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கான விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை சேவைக்கான விடை குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கலாம். தேர்வின்போது விண்ணப்பதாரர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் உள்ள குறியீட்டின்படி அல்லாமல் தேர்வாணையம் இணையத்தில் வழங்கியுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்வி எண்களின்படி தேர்வர்கள் சரிசெய்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் தங்கள் ஆட்சேபணைகளை ஜனவரி 20-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். முழு தேர்வு செயல்முறையும் முடிந்த பின்னரே இறுதி விடைத்தாள்கள் ஆணையத்தால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
குறிப்பு பதிவிறக்கம் செய்யும் முறை இதோ.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.
அங்கு, தேர்வுக்கான COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN என்ற லிங்கை கீழ் செய்ய வேண்டும்.
புள்ளியியல், பொருளாதாரம், கணிதம் மற்றும் பொது ஆய்வு என்று பாடவாரியாக இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் உள்ள தேவையான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் TNPSC CSSE Answer Key 2022 என்பதை புதிய பக்கத்தில் பெறுவீர்கள்.
இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்