குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் காலியாகவுள்ள 4 பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4-ல் இருந்து 25 ஆக மாற்றி அமைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சமாக 30 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் (அல்லது) கல்வி நிலைய வணிகத்தில் (அல்லது) சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே விருப்பம் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து பாடத்திட்டத்தில் சில மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.