Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 2, 2A தேர்வர்களே!…. உடனே நோட் பண்ணுங்க…. கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை.

இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் 5,831 காலிபணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் ? என்பது குறித்த முழு விவரங்களையும் நேற்று ( பிப்.18 ) வெளியிட்டார். அதன்படி மே 21-ஆம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். மொத்த உள்ள 200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி ( TNPSC) குரூப் 2 :-

பணியின் பெயர் :-

* சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி

* துணை வணிகவரி அதிகாரி

* உதவி தொழிலாளர் ஆய்வாளர்

* இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)

* சார் பதிவாளர்

* லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்.

* இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)

* TNPSC உதவி பிரிவு அதிகாரி

* வேளாண்மை விற்பனை துறை மேற்பார்வையாளர்.

* உள்ளாட்சி நிதிதணிக்கை உதவி ஆய்வாளர்

* தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்.

* இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்

* கைத்தறி ஆய்வாளர்

* கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்

* பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு 2)

* வருவாய் உதவியாளர்.

தேர்வு முறை :-

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கல்வித்தகுதி :-

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதிய அளவு :-

ரூ. 9300 முதல் ரூ. 34800 வரை.
தர ஊதியம் ரூ. 4800 (மாதம்)

டிஎன்பிஎஸ்சி குரூப்-2A :-

பணியின் பெயர் :-

தனிப்பட்ட கிளார்க் (Personal Clerk),
லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk), ஸ்டெனோ டைப்பிஸ்ட் (Steno Typist)
உதவியாளர் (Assistant in Various Department)

தேர்வு முறை :-

எழுத்துத் தேர்வு மட்டும்.

கல்வித்தகுதி :-

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதிய அளவு :-

ரூ. 5200 முதல் ரூ. 20200 வரை வழங்கப்படும்.
தர ஊதியம் ரூ. 2800 (மாதம்) ஆகும்.

Categories

Tech |