Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 4 தேர்வர்களே!…. மே 11 வரை அவகாசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த குரூப்-4 தேர்வில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி தமிழக அரசு சார்பில் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி ஆகிய இடங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று மாத காலம் நடைபெற இருக்கிறது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏப்ரல் 27 முதல் மே 11 வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு தேர்வாணையம் குழுவின் இணையதளத்தில் தங்களது கல்வி, வயது உள்ளிட்ட தகுதிகள் குறித்த விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி மையத்தில் 500 தேர்வர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். எனவே பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உடனே இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |