தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வினை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் கொரோனா காரணமாக தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இவற்றில் எந்த தேர்வுகள் எப்போது நடைபெறும், பணி இடத்திற்கான காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்கள் மட்டும் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் எந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதியும், மேலும் அந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் நேர்காணல், கலந்தாய்வு உள்ளிட்டவை எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் விவரங்களும் இடம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக தேர்வர்கள் போட்டித் தேர்விற்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்ளமுடியும். இந்த திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பெற விரும்புவர்கள் www.tnpsc.gov.in எனும் இணையபக்கத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.