மேலும் தேர்வில் விருப்ப மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல 40 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பிரிவில் எடுத்தால் அதுவும் மதிப்பிடப்படும்.
அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படும். இச்சூழலில் குரூப்-2, குரூப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு, குரூப்-4, குரூப்-3, குரூப்-7-பி, குரூப்-8, சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.