தமிழகத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ( 2022 ) டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அடுத்ததாக மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
எனவே தேர்வாளர்கள் குரூப்-2 தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இந்த போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களும் அதிக அளவில் கேட்கப்படும். எனவே தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy நடப்பு நிகழ்வுகளை தேர்வர்கள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் வாரம்தோறும் நடப்பு நிகழ்வுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ( பிப்.5 ) இந்த வாரத்திற்கான நடப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் Weekly Current Affairs Mock Test என்ற லிங்கை கிளிக் செய்து காலை 10 மணிக்கு தேர்வு எழுதலாம்.