ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு பணியில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் 5,255 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. அரசு பணிக்காக தயாராகி வருபவர்களில் ஏராளமானோர் குரூப்-4 & VAO தேர்வுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு குரூப்-4 & VAO தேர்வுக்கு காத்திருப்போருக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 & VAO தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்கள் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ள General Science பாடத்தின் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த தேர்வினை எழுத விரும்புபவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வதன் மூலம் தேர்வில் கலந்து கொள்ள முடியும். எனவே ஆர்வமுள்ளவர்கள் TNPSC Group 4 & VAO MOCK TEST Registration என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.