தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பொது பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கு தேர்வான 570 நபர்களுக்கு மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெறும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பணியில் முதல்வர் மற்றும் உதவி இயக்குனர் பதவிக்கு 50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.