டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது.
பின்னர் டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குரூப்-2, குரூப்-4 VAO தேர்வுக்கான புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு கணக்கு வைத்திருக்கும் தேர்வாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வாளர்கள் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இந்த விவரங்களை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எதிர்காலத்தில் வெளியிடும் அறிக்கைகள் அடிப்படையில் தேர்வர்கள் தனது ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு குறித்த முழு விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1800419095 ( அல்லது ) [email protected] /[email protected] மூலம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.