தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற 31ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும்.மேலும் தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில் நான்கு பணியிடங்களை நிரப்ப இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.