Categories
மாநில செய்திகள்

டிஎஸ்பிக்கு வந்த மற்றொரு சிக்கல்… காவல் துறையில் பெரும் பரபரப்பு…!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாகர்கோவில் உள்ள புன்னை நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் ஒரு ஜவுளிக்கடை அதிபர். இந்நிலையில்  இரணியல் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை,இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். ஆனால் இந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்துக்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, நிலத்தை ஜவுளிக்கடை அதிபரான சிவகுரு குற்றாலத்துக்கு எழுதி கொடுக்காமல், அவரே தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து சிவகுரு குற்றாலம், நாகர்கோவில் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். எனவே இது பற்றி டிஎஸ்பி தங்கவேலு விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க ரூ.10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று சிவகுரு குற்றாலத்திடம், போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு கூறியுள்ளதாக  தெரிகிறது. மேலும் இதற்கிடையே பணத்தை பெற்றவர்கள் சிவகுரு குற்றாலத்துக்கே நிலத்தை எழுதி கொடுத்துவிட்டனர். ஆனாலும் டிஎஸ்பி தங்கவேலு ஜவுளிக்கடை அதிபரிடம், ‘நான் சொன்னதால் தான் உனக்கு நிலத்தை எழுதி கொடுத்தனர். அதனால் எனக்கு நீ ரூ.5 லட்சம் தர வேண்டும்’ என கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவகுரு குற்றாலம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்த்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகுரு குற்றாலத்திடம் ரசாயன பவுடர் கலந்த பணத்தை கொடுத்து அனுப்பினர்.  அதன் பின், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி தங்கவேலுவிடம் சிவகுரு குற்றாலம், பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பியை கையும்களவுமாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேலுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம்,  தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மாயகிருஷ்ணன் அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டிஎஸ்பி தங்கவேலு நெல்லை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேலுவின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |