தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
Executive officer பணிக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு சமய நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பானது,
பொதுப் பிரிவினருக்கு 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற பிரிவினர் – No Age Limit
சம்பளம் :
மாதம் ரூ.20,600 முதல் ரூ.75,900/-+ படிகள்
தேர்வுக் கட்டணம்:
Registration Fee – Rs.150/-
Exam Fee – Rs.100/-
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen– No Fees.
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
எழுத்துத்தேர்வு 10.09.2022 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.06.2022
IMPORTANT LINKS
https://www.tnpsc.gov.in/Document/english/12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf