தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை, முதுகலை பட்டம், B.ed, M.ed, M.Phil உள்ளிட்ட படிப்பை முடித்த தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். ‘
மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnschoolteachers.com என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும். இதை பதிவு செய்ய இயலாதவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.