Categories
தேசிய செய்திகள்

டிகே.சிவகுமாரின் சொத்துக்கள் முடக்கம் – 50 லட்சம் பறிமுதல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.டிகே சிவகுமாரின் சொத்துகளை முடக்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள திரு. டிகே சிவகுமார் மீது வருமான வரித்துறை சார்பில் வரி ஏய்ப்பு  புகார் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த இரு புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் திரு. சிவகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திரு. சிவகுமாருக்கு சொந்தமான இடங்கள் திரு. சிவகுமார் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டிகே சுரேஷ் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திரு. டிகே சிவகுமாரின் சொத்துகளை முடக்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் 50 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |