Categories
தேசிய செய்திகள்

டிக்கெட்டுக்கு பைசா வாங்கிட்டு நிகழ்ச்சி நடத்தல!… பெண் நடன கலைஞர் மீது பாய்ந்த மோசடி வழக்கு…. பரபரப்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி ஆவார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் வருடம் ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவு கட்டணமாக தலா 300ரூபாய் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது நடனநிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. பின் நிகழ்ச்சியானது ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூபாய். 300-ஐ டிக்கெட் வாங்கியவர்கள் யாருக்கும் நிகழ்ச்சி நிர்வாகம் திரும்பிக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை பார்க்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரொஸ கான், பணம் திருப்பி தராததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உட்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் பணமோசடி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவ்வழக்கு லக்னோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் நடன நிகழ்ச்சி நடத்துவதாக கூறி பணம் வசூல் செய்து விட்டு நிகழ்ச்சியை நடத்தாமல் மோசடி செய்ததாக பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உள்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிபதி உறுதி செய்தார். அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள பண மோசடி வழக்கு பிரிவு 420 மற்றும் பிரிவு 406 போன்றவற்றையும் நீதிபதி உறுதிசெய்தார். அதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி உட்பட 4 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |