Categories
மாநில செய்திகள்

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை…. ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயின் கோட்ட மேலாளராக கணேஷ் என்பவர் இருக்கிறார். இவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் ரயில்வே  நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 1 1/2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆன்லைன் வழியாக கண்டுபிடிப்பாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பாளர்களின் தொழில் நுட்பங்களுக்கும் உரிய உரிமங்கள் வழங்கப்படும். அதன்பிறகு ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் பற்றி அல்ட்ராசோனிக் கருவியின் மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றை தானியங்கி முறையில் முன்பாகவே கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அதன்பிறகு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டுகள் பறித்துக் கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் டிடிஆர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |