Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்காதத ஏன் கவனிக்கல…? கேள்வி கேட்ட பரிசோதகர்…. டிரைவர் கண்டக்டர்கள் போராட்டம்….!!

டிக்கெட் பரிசோதனை அதிகாரியை கண்டித்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்து டிக்கெட் பரிசோதகர் ஏறியுள்ளார். பின்னர் அவர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தபோது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபருக்கு பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்தார் பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் கண்டக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

ஆனால் கண்டக்டர்  சரியான பதில் அளிக்கத்தால், அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கண்டக்டர் டிக்கெட் அதிகாரிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். இதனையடுத்து அந்த கண்டக்டருக்கு ஆதரவாக பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற டிரைவர், கண்டக்டர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்துகளை இயக்க மறுத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்வோருக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது. மேலும் அனைத்து பேருந்துகளும்  பேருந்துநிலையத்திற்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த சம்பவம் பற்றி அறிந்த  போக்குவரத்து துறை அதிகாரிகள், எஸ்பிளனேடு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கண்டக்டர், டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனையடுத்து காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை நடந்த  போராட்டம் முடிவுக்கு வந்து போக்குவரத்து சீரானது.

 

 

 

Categories

Tech |