Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்குமாறு கூறிய கண்டக்டர்…. பேருந்திலிருந்து தள்ளி விட்ட வாலிபர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதால் கண்டக்டரை வடமாநில வாலிபர்கள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன் பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் சிலர் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகோபலபுரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கண்டக்டர் ஆறுமுகம் என்பவர் டிக்கெட் எடுக்காதவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் கண்டக்டருக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடமாநில வாலிபர்கள் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஆறுமுகத்தை கீழே தள்ளிவிட்டனர். இதில் காயமடைந்த கண்டக்டரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |