ரீஃபண்ட் குறித்த தகவல்களை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். மற்ற பயணங்களை விட ரயில் பயணம் விரைவாகவும், கட்டணம் குறைவாக இருப்பதனால் பெரும்பான்மையினர் இதனை தேர்ந்தெடுக்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் அதில் உள்ள விதிமுறைகள் பற்றி தெரிந்து இருப்பது அவசியமாகும். சில பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து வைத்து பல காரணங்களுக்காக அதை கேன்சல் செய்து விடுவார்கள். அவ்வாறு முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீஃபண்ட் தொகை கிடைக்கும்.
கடைசி நேரத்தில் செய்யும்போது பல நேரங்களில் ரீபண்ட் தொகை வராது. ரயில் பயணத்திற்கான சார்ட் தயாரித்த பின்னர் கூட கேன்சல் செய்தால் கிடைக்கும் என இந்தியா ரயில்வே தெரிவித்துள்ளது. சில காரணங்களுக்காக ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் போது அதற்கான ரீஃபண்ட் தொகைய கிளைம் செய்து வாங்கும் வசதி உள்ளது. இது பற்றிய விளக்கத்தை ஒரு வீடியோ உடன்IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தனதுரீஃபண்ட் தொகைக்கான டிக்கெட் டெபாசிட் ரசீது (TDR) எவ்வாறு சமர்ப்பிப்பது என்று விளக்கியுள்ளது.
அதற்கு முதலில் IRCTC வெப்சைட்டில் செல்ல வேண்டும். www.irctc.co.in
ஹோம் பேஜில் உள்ள ‘My account’ என்ற வசதியில் சென்றால் My transaction என்ற ஒரு ஆப்சன் இருக்கும், அதை கிளிக் செய்யவும். அதில் சென்றால் TDR சமர்ப்பிக்கும் வசதி இருக்கும்.
ரயில் டிக்கெட் புக்கிங் செய்த நம்பரின் விவரங்கள், PNR நம்பர், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை பதிவிட்டு ‘submit’ கொடுக்க வேண்டும்.
முடிவில் உங்களுக்கு எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும் போன்ற விவரங்களை நீங்கள் பார்க்க முடியும். இதற்கான உறுதிப்படுத்தும் தகவல் SMS மூலமாக அனுப்பப்படும்